அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

நான் எப்படி உள்நுழைவது?

உமது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து உமது மெய்நிகர் அவதாரத்திற்கு பெயரிட்ட பிற்பாடு “connect” ஐ அழுத்துவதன் மூலம் உள்நுழைய முடியும்.

ஒரே காட்சியில் உறைந்து விட்டீரா?

தளத்தை refresh செய்வதன் மூலம் நிலையை மீண்டும் கட்டுக்குள் கொணர முடியும். தொடர்ந்தும் ஏதேனும் சிக்கல்கள் தொடருமெனின் 0767412345 மூலம் எம்மை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

சிறந்த பயனர் அனுபவத்திற்கு எந்த உலாவியை (browser) பயன்படுத்த வேண்டும்.

சிறந்த பயனர் அனுபவத்திற்கு Google Chrome பொருத்தமானது இருப்பினும் அதனுடன் குறைந்தது 8GB RAM உடைய கணினி அற்புதமான அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும்.

எனது ஒலிவாங்கி மற்றும் இணையக்கமரா ஆகியன இயங்கவில்லை?

நீங்கள் ஒலிவாங்கி/இணையக்கமரா சின்னத்தை தெரிவுசெய்து அவை toggled ON செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்க அல்லது தளத்தை refresh செய்க.

Metaverse சூழலில் பயணிப்பது எவ்வாறு?

W + S அல்லது மேல் + கீழ் அம்புக்குறிகள் ஐ பிரயோகிப்பதன் மூலம் நகர முடியும். உங்கள் mouse இல் இடதுபுறத்தை அழுத்திப்பிடித்து Mouse ஐ அசைப்பதன் மூலம் சுற்றிப்பார்க்கவும் திரும்பவும் முடியும். SHIFT ஐ அழுத்துவதன் மூலம் வேகமாக நகர முடியும்.

எத்தனை முறை முயன்றும் என்னால் இணைந்து கொள்ள முடியவில்லை?

உங்கள் மின்னஞ்சலை சரிபார்த்து வழங்கப்பட்ட expo இல் இணைய முயற்சிக்க. தளத்தை refresh செய்வதன் மூலம் மீள இணைந்துகொள்ள முடியும். அல்லது வேறு browser ஐ பாவிக்க. தொடர்ந்தும் சிக்கலாக இருந்தால் 0767412345 மூலம் எம்மை தொடர்பு கொள்க.

ஒலி வேறொரு/ தெரியப்படாத சாதனத்தில் இருந்து வெளிவருகிறது?

உங்கள் திரையில் கீழிருக்கும் Toolbarல் ஒலிவாங்கி சின்னத்தில் Right click செய்து speakers/headphones அல்லது microphones இற்கிடையில் மாற்றிக்கொள்க.

என் மெய்நிகர் அவதாரத்தை எவ்வாறு விருப்பம் போல் மாற்றியமைப்பது?

நீங்கள் உள்நுழைந்த பிற்பாடு, உங்கள் Keyboard இல் C ஐ அழுத்தி அதில் காண்பிக்கப்படும் தனிப்பயனாக்க தெரிவுகளுக்கு அமைய உங்கள் மெய்நிகர் அவதாரத்தை மாற்றி அமைக்கலாம்.

எனது திரையில் சிவப்பு மற்றும் கருப்பு சதுரங்கள் தோன்ற காரணம் என்ன?

துரதிஷ்டவசமாக, மெதுவான இணையவேகம் காரணமாக மேற்பரப்புகள் சரியாக ஏற்றப்படவில்லை. உங்கள் Browser ஐ refresh செய்து இந்த சிக்கலை தீர்க்க. அல்லது வேறு நிலையான இணைய இணைப்பை பெற்றுக்கொள்க.